ஆரோக்கியம்
மார்பக புற்றுநோயை தாமதப்படுத்தும் புதிய மாத்திரை – அமெரிக்காவில் மருத்துவ புரட்சிக்கான புதிய முன்னேற்றம்!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
மார்பக புற்றுநோயை தாமதப்படுத்தும் ‘கேமிசெஸ்ட்ரான்’ மருந்து – நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை!
2023-ஆம் ஆண்டு அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் உருவாக்கிய கேபிவாசெர்டிப் என்ற மருந்து, HR Positive மற்றும் HER2 Negative வகை மார்பக புற்றுநோயுக்கு எதிரான சிகிச்சையில் முக்கிய முன்னேற்றமாக கருதப்பட்டது. இந்த மருந்துக்கு பிரிட்டனின் NICE (National Institute for Health and Care Excellence) நிறுவனம் பயன்பாட்டு அனுமதி வழங்கியது.
தற்போது, அதே நிறுவனத்தின் ‘கேமிசெஸ்ட்ரான்’ (Camizestrant) என்ற புதிய மாத்திரை, மார்பக புற்றுநோய் பரவலை ஆறுமாதங்கள் தாமதப்படுத்தும் திறன் கொண்டதாக அறியப்படுகிறது. இது நோயின் வளர்ச்சியை மெதுவாக்குவதோடு, கீமோதெரபி தேவை மற்றும் அதனால் ஏற்படும் பக்கவிளைவுகளை தாமதப்படுத்தும் நம்பிக்கை தருகிறது.
மருத்துவ வல்லுநர்கள் கூறுகையில், இந்த மாத்திரை நோயாளிகளின் ஆயுளை நீட்டிக்கவும், சிகிச்சையின் தரத்தை மேம்படுத்தவும் வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.
