உலகம்
25 வயது ரஷ்ய அழகிக்காக பதவியை தூக்கி எறிந்த 49 வயது மலேசிய மன்னர்

மலேசிய மன்னராக இருந்த 49 வயதான சுல்தான் முகமது 25 வயதான மிஸ் மாஸ்கோ பட்டம் வென்ற அழகி ஓக்சானா வோயவோடினாவை காதலித்து திருமணம் செய்துள்ளார் என்ற செய்தி வெளியானது. இந்நிலையில் அவர் இதற்காக தனது மன்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மலேசியாவில் மன்னர் ஆட்சியில் மக்களாட்சி என கூட்டாட்சி முறையில் அரசு இயங்குகிறது. அந்நாட்டின் 15-வது மன்னராக 5-ஆம் சுல்தான் முகமது கடந்த 2016-ஆம் ஆண்டு முடிசூடினார். இவரது தலைமையில் மலேசிய பிரதமராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மகாதீர் பின் முகமது உள்ளார்.
49 வயதான மன்னர் சுல்தான் முகமது ரஷ்யாவை சேர்ந்த மிஸ் மாஸ்கோ பட்டம் பெற்ற ஓக்சானா வோயவோடினா என்ற 25 வயதான பெண்ணை காதலித்து கடந்த 2017 நவம்பரில் திருமணம் செய்துகொண்டார் என வீடியோ மற்றும் புகைப்படங்களுடன் செய்தியகள் வெளியாகின.
இதனையடுத்து சுல்தான் முகமது தனது மன்னர் பதவியை ராஜினாமா செய்வார் என அப்போது தகவல் பரவியது. ஆனால் நேற்று தன் மன்னர் பதவியிலிருந்து சுல்தான் முகமது விலகியுள்ளார் என மலேசிய மன்னரின் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


















