Connect with us

கிரிக்கெட்

சர்ச்சைக்குரிய வீடியோ.. பிசிசிஐ பொறுப்பில் இருந்து சேத்தன் சர்மா ராஜினாமா..!

Published

on

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிசிசிஐ தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா பேட்டி அளித்த நிலையில் அந்த பேட்டி சர்ச்சைக்குள்ளானதால் அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது அவர் இந்திய அணி குறித்தும் கங்குலி மற்றும் விராட் கோலி இடையே நடந்த விவகாரம் குறித்தும் பேசினார். அதுமட்டுமின்றி பும்ராவின் உடல் தகுதி குறித்து அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

#ரோகித் சர்மா ஹர்திக் பாண்டியா ஆகிய வீரர்கள் தனது வீட்டிற்கு வந்து வெகு நேரம் பேசி விட்டு செல்வார்கள் என்றும் நாங்கள் நிறைய விஷயங்களை பற்றி பேசுவோம் என்றும் ஆனால் அவை என் வீட்டை விட்டு வெளியே வராது என்றும் சேட்டன் சர்மா அந்த பேட்டியில் கூறியிருந்தார். மேலும் தனியார் தொலைக்காட்சியிடம் அவர் அளித்த பேட்டி பேட்டியில் மேலும் சில முக்கிய தகவல்களை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த பேட்டி ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் தற்போது அவர் தனது தேர்வு குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்து உள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய்ஷாவிடம் கொடுத்துள்ளதாகவும் அந்த ராஜினாமாவை ஜெய்ஷா ஏற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பஞ்சாபை சேர்ந்த சேத்தன் சர்மா 17 வயதிலேயே இந்திய அணிக்காக கிரிக்கெட் விளையாடியவர் என்பதும் முதல் போட்டியில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக உலக கோப்பையை வென்ற கபில்தேவ் அணியில் சேத்தன் சர்மா விளையாடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1989 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற அவர் ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து விளையாடினாலும் 1994 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பின் அவர் வர்ணனையாளராக சில ஆண்டுகள் இருந்தார் என்பதும் கிரிக்கெட் மட்டுமின்றி அரசியலிலும் அவர் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் அவர் முதலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் பாஜகவில் இணைந்து சில முக்கிய பொறுப்புகளை பெற்ற அவர் கடந்த ஆண்டு கடந்த 2020 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்11 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?