இந்தியா
மாதம் ரூ.30 லட்சம் சம்பளம்.. வேலையை ராஜினாமா செய்த தம்பதி.. இன்று சமோசா விற்று தினம் ரூ.12 லட்சம் வருமானம்..!

ஐடி நிறுவனத்தில் மாதம் 30 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய தம்பதிகள் அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு சமோசா விற்பனை நிலையத்தை தொடங்கிய நிலையில் தற்போது அந்த தம்பதியரின் நிறுவனம் தினமும் 12 லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்து வருவதாக கூறப்படும் தகவல் பெறும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த நிதி சிங் மற்றும் அவரது கணவர் சிகர் வீர்சிங் ஆகிய இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் செய்து கொண்டனர். ஹரியானாவில் பயோ டெக்னாலஜி பிடெக் படிக்கும் போது தான் இருவரும் முதன் முதலில் சந்தித்தனர் என்பதும் முதலில் நட்பாக பழகிய அவர்கள் பின்னர் காதலித்து பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருவருக்குமே நல்ல வேலை கிடைத்தது என்பதும் கார்ப்பரேட் நிறுவனத்தில் தொடங்கிய அவர்களது வேலை பின்னர் படிப்படியாக உயர்ந்து மாதம் 30 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் அளவுக்கு புரமோஷன் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தாங்கள் பார்க்கும் வேலையில் திருப்தி அடையாத நிதி சிங் மற்றும் அவரது கணவர் சிகர் வீர்சிங் ஆகிய இருவரும் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்திக்க தொடங்கினர்.
அப்போது அவர்கள் ஒரு ஹோட்டலில் சாப்பிட சென்றபோது அங்கு ஒரு குழந்தை சமோசா வேண்டும் என்று அழுது அடம் பிடித்ததை பார்த்தனர். குழந்தைகளுக்கு மட்டும் இன்றி பெரியவர்கள் உள்பட அனைவருக்கும் பிடித்தமான சமோசா கடையை வைக்க அவர்கள் அப்போதுதான் முடிவு செய்தனர்.
சமோசா சிங் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் படிப்படியாக உயர்ந்து இன்று இந்தியாவின் பல நகரங்களில் கிளைகளை கொண்டு வளர்ந்து உள்ளது என்பதும் இந்த தம்பதிகள் தினமும் ரூ.12 லட்சம் தற்போது சம்பாதித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியா முழுவதும் குறிப்பாக வட இந்தியர்கள் சமோசாவுக்கு அடிமை என்றே கூறலாம். அந்த அளவுக்கு சமோசாவை சுவைத்து ரசிப்பதில் இந்தியர்கள் விருப்பமானவர்கள். அந்த வகையில் சமோசா சிங் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கடையில் சமோசா மிகவும் சுவையாக இருந்ததை அடுத்து ஒரு சில மாதங்களிலேயே வியாபாரம் உச்ச கட்டத்தை சென்றது என்றும் அதன் பிறகு இந்தியாவின் பல நகரங்களில் கிளைகளை அமைத்து தற்போது ஒரு சமோசா ராஜ்யத்தை இந்த தம்பதிகள் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.