உலகம்
இனி ரஷ்யாவுக்கு இந்தியர்கள் எளிதில் செல்லலாம்.. சூப்பர் அறிவிப்பு..!

வெளிநாடு செல்பவர்களுக்கு விசா நடவடிக்கை என்பது ஒரு மிகப்பெரிய பணியாக இருக்கும் என்பதும் ஒரு சில நாடுகளுக்கு விசா கிடைப்பது என்பது குதிரை கொம்பாக இருக்கும் என்பதும் தெரிந்ததே. அந்த வகையில் ரஷ்யாவுக்கு இனி செல்லும் இந்தியர்களுக்கு மிகவும் எளிதான வாய்ப்பு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியா, சிரியா, இந்தோனேசியா உள்பட ஆறு நாடுகளுக்கு விசா நடைமுறைகளை தளர்த்த ரஷ்யாவின் வெளியேறுத்துறை அமைச்சர் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வழியாக உள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்தே ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன என்பது தெரிந்ததே. ஆனால் இந்தியா உட்பட ஒரு சில நாடுகள் மட்டுமே ரஷ்யாவுக்கு வெளிப்படையாகவே ஆதரவு தந்து வந்தது. ரஷ்யாவின் படையெடுப்பை இந்தியா கண்டிக்கவில்லை என்பது மட்டும் இன்றி ஐநா சபையிலும் நடுநிலை வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐநாவில் ரஷ்யாவுக்கு எதிராக இயற்றப்படும் எந்த தீர்மானத்தையும் ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்கவில்லை என்பதும் அதுமட்டுமின்றி ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கிய நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் வர்த்தக ரீதியாக இந்தியா மற்றும் ரஷ்யா நெருக்கம் அடைந்துள்ள நிலையில் தற்போது இந்தியா உள்பட ஒரு சில நாடுகளுக்கு விசா நடைமுறையை எளிமைப்படுத்த ரஷ்ய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியா, சிரியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், அங்கோலா ஆகிய நாடுகளில் இருந்து ரஷ்யா வருபவர்கள் இனி விசா நடைமுறையில் எளிமையாக செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி சவுதி அரேபியா, பார்படாஸ், ஹைட்டி, ஜாம்பியா, குவைத், மலேசியா, மெக்சிகோ மற்றும் டிரினிடாட் உள்ளிட்ட 11 நாடுகளுடன் விசா இல்லாத பயணங்களுக்கான ஒப்பந்தங்களையும் ரஷ்யா தயாரித்து வருவதாகவும் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளை தவிர ஆசியா மற்றும் கிழக்கு நாடுகள் இனி ரஷ்யாவுடன் மிக நெருக்கமாக உறவை கடைபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.