Connect with us

சினிமா செய்திகள்

கமல் பிஸி… விஜய் சேதுபதியிடம் தாவிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ்..!- புதுப்பட அப்டேட்

Published

on

கமல் பிஸியாக உள்ளதால் அவரது படத்துக்கு முன்னர் விஜய் சேதுபதி படம் ஒன்றை இயக்க உள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

மாநகரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி கைதி, மாஸ்டர் என பெரும் பட்ஜெட்களுடன் பெரிய ஹீரோக்கள் படமாக இயக்கத் தொடங்கி உள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படம் வெளியாவதற்கு முன்பே நடிகர் கமல்ஹாசன் உடன் விக்ரம் என்னும் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார் லோகேஷ்.

தற்போது கமல் ஹாசன் காலில் அறுவை சிகிச்சையை முடித்து ஓய்வில் இருக்கிறார். இதன் பின்னர் தமிழக சட்டசபைத் தேர்தலுக்காக கமல் பிஸியாக உள்ளாராம். இதனால், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் விக்ரம் படத்தை நிறைவு செய்ய வேண்டும் என்ற கமல்- லோகேஷ் திட்டம் மாறிவிட்டதாம். இதனால், கமல் வருவதற்கு முன்னர் குறைவான பட்ஜெட்டில் விஜய் சேதுபதியை நாயகனாகக் கொண்டு ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளாராம் லோகேஷ்.

அதற்குப் பின்னர் கமல் உடன் விக்ரம் படத்தை நிறைவு செய்பவர் மீண்டும் தளபதி விஜய் உடன் இணைந்து விஜய் 66 படத்தையும் இயக்க உள்ளதாகக் கோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Explore storefront tools →.