சினிமா
விக்ரம் படம் ரிலீஸ் எப்போது தெரியுமா? – டிவிட்டரில் உறுதி செய்த லோகேஷ் கனகராஜ்…

கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தில் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் பஹத்பாசில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.கடந்த நவம்பர் 7ஆம் தேதி கமல்ஹாசன் தனது பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டார்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படம் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இந்த செய்தியை லோகேஷ் கனகராஜே உறுதி செய்துள்ளார்.
படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இப்படம் 2022ம் வருடம் கோடை விடுமுறையில் வெளியாகும் என தெரிவித்துள்ளார். இந்த செய்தி கமல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
#ACTION from the sets of VIKRAM#Vikram_release_onsummer2022 #Vikram #KamalHaasan @ikamalhaasan @VijaySethuOffl #FahadhFaasil pic.twitter.com/9cWlmshrbb
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) December 22, 2021

















