சினிமா செய்திகள்
விஜய் படத்திற்கு வைக்க வேண்டிய டைட்டிலை கைப்பற்றிய தனுஷ்: வைரல் வீடியோ

விஜய் படத்திற்கு டைட்டில் வைக்கலாம் என்று பரிசீலனை செய்யப்பட்ட டைட்டில் தற்போது தனுஷ் படத்திற்கு வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நடிக்கும் தமிழ் மற்றும் தெலுங்கு படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் இந்த டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் தமிழில் ‘வாத்தி’ என்றும் தெலுங்கில் ’சார்’ என்றும் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்திற்கு ‘வாத்தி’ என்ற டைட்டில் தான் முதலில் பரிசீலனை செய்யப்பட்டது என்பதும் அதற்காகவே ’வாத்தி கம்மிங்’ என்ற பாடலும் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த படத்திற்கு மாஸ்டர் என்ற டைட்டில் மாற்றப்பட்டதை அடுத்து தற்போது ‘வாத்தி’ டைட்டில் தனுஷ் படத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த தளத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#vaathi #sir title motion poster pic.twitter.com/0oOnUPQpTH
— Dhanush (@dhanushkraja) December 23, 2021

















