சினிமா
விஜே அர்ச்சனா அதிரடி: ’கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தேன்!’

தன் கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்ததாக விஜே அர்ச்சனா கூறியிருக்கிறார்.
தமிழில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணித் தொகுப்பாளராக வலம் வருபவர் விஜே அர்ச்சனா. சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது, ’இதுவரை ஊடகம் எதற்கும் கூறாத ஒரு விஷயத்தை இங்கே நான் சொல்கிறேன்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால் நானும் என் கணவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்தோம். இதைத் தெரிந்து எங்கள் மகள் சாரா, ‘நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்க முடியுமா என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்’ என்று சொன்னாள். அதன் பிறகே, நாங்கள் எங்கள் முடிவை கைவிட்டு 20 வருடங்களுக்கு முன்பு எப்படி காதலித்தோமோ அப்படி மீண்டும் காதலிக்கத் தொடங்கியுள்ளோம். என் கணவர் வினீத் கப்பற்படையில் வேலை செய்கிறார்.
நானோ, தொகுப்பாளினி. இருவரும் வெவ்வேறு துறைகளில் இருப்பதால், பல சமயங்களில் எங்களுக்குள் கருத்து மோதல்கள் வரும். அதுவும் விவாகரத்து முடிவு நாங்கள் எடுக்க ஒரு காரணம். ஆனால், இப்போது எங்கள் மகள் சொன்ன வார்த்தைக்காக அந்த முடிவை கைவிட்டு இப்போது மீண்டும் காதலிக்கத் தொடங்கியுள்ளோம்’ என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார் அர்ச்சனா.