சினிமா
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகிய சாய் காயத்ரி- என்ன காரணம்?

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் இருந்து ஐஷ்வர்யா விலகி இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முக்கியமானது. இதில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாய் காயத்ரி தற்போது அந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். இதை அதிகாரப்பூர்வமாக தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் சாய் காயத்ரி. இது தொடர்பாக இவர் கூறியிருப்பதாவது, ‘ஆமாம்! நான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சிரீயலில் இருந்து விலகி விட்டேன்.

#image_title
இனிமேல், ஐஷ்வர்யா கேரக்டர் எனக்கு சரியாக வராது. இனிமேல் ஐஷ்வர்யா கதாபாத்திரத்தின் ஸ்டோரி லைன் அந்த கதாபாத்திரத்திற்கும் என்னுடைய மீடியா பயணத்திற்கும் சரியாக வரும் என்று தோன்றவில்லை. இந்தப் பயணத்தில் ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி.
என்னுடைய முடிவை ஏற்றுக் கொண்டு மதிப்பளித்த விஜய் தொலைக்காட்சிக்கும் நன்றி’ எனக் கூறியுள்ளார். இதற்கு முன்பு, ஐஷ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்த தீபிகா விலகிய பின்பே சாய் காயத்ரி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த காவ்யாவும் சமீபத்தில் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.