சினிமா செய்திகள்
’லிப்ட்’ வெற்றியை அடுத்து கவினின் அடுத்த படம் தயார்: ரிலீஸ் எப்போது?

கவின் மற்றும் அம்ரியா ஐயர் நடிப்பில் உருவான ’லிப்ட்’ என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை பல திரையுலக பிரபலங்கள் பாராட்டுக்கும் இயக்குநருக்கு பாராட்டு தெரிவித்தனர் என்பதும் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேய் படம் என்றாலே த்ரில் கதையம்சம் கொண்ட படம் என்ற நிலையில் அதனை நகைச்சுவை படமாக கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமா இயக்குநர்கள் மாற்றினர். ஆனால் மீண்டும் பயப்படும் வகையில் ஒரு பேய் படத்தை இயக்கிய இயக்குனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தது என்பதும் லிப்ட் திரைப்படம் வெற்றி பெற்றதற்கு இதுவும் ஒரு காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலிருந்து ’லிப்ட்’ வெற்றியை அடுத்து ’ஆகாஷ்வாணி’ என்ற வெப்தொடரில் கவின் நடித்து வந்தார். இந்த தொடரின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் இன்றுடன் இந்த படப்பிடிப்பு முடிவடைந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தொடரை அட்லீயிடம் ஏற்கனவே உதவி இயக்குனராக இருந்த ஈநாக் அபில் என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடரில் கவின் ஜோடியாக மோனிகா ரெபா ஜான் நடிக்கிறார் என்பதும் இவர் ஏற்கனவே விஜய் நடித்த பிகில் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த தொடரில் சரத் ரவி, தீபக் பரமேஷ், வின்சா, அபிதா வெங்கட், மேகி ஆகியோர் நடித்துள்ளனர் என்பதும், குணா பாலசுப்ரமணியம் இசையமைக்கும் இத்தொடருக்கு சாந்தகுமார் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வெப்தொடரை கஸ்துபா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் சோனியா ராம்தாஸ் தயாரிக்கிறார்.

















