சினிமா
‘டாடா’ வெற்றியால் சம்பளத்தை உயர்த்தினாரா கவின்?

‘டாடா’ படம் தந்த வெற்றியை அடுத்து நடிகர் கவின் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலம் புகழ் பெற்ற நடிகர் கவின், தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரலமடைந்தார். பின்பு ‘லிஃப்ட்’ பட மூலம் பெரிய திரையிலும் கவனம் ஈர்த்தார். இதனை அடுத்து, கவின், அபர்ணாதாஸ் நடிப்பில், ‘டாடா’ படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்த படம் பெரும் வெற்றியை பெற்றது.
இதனை அடுத்து நடிகர் கவின் அடுத்து நடன இயக்குநரும் நடிகருமான சதீஷ் இயக்கத்தில் அனிருத் இசையில் புதிய படம் ஒன்று ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம். இந்த படத்தில் பிரியங்கா மோகனை கதாநாயகியாக நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. ‘டாடா’ படம் பெரும் வெற்றியை பெற்றதை அடுத்து இப்போது ஒப்பந்தமாகியுள்ள புதிய படத்தில் நடிகர் கவின் தனது சம்பளத்தை 1.5 கோடியாக உயர்த்தி இருக்கிறார் என தகவல் வழியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.