சினிமா செய்திகள்
கவின், அபர்ணா தாஸ் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த டாடா.. ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா?

பிக் பாஸ் கவின் மற்றும் பீஸ்ட் அபர்ணா தாஸ் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட பலரும் கவினின் டாடா படத்தை பாராட்டினர். இந்நிலையில், அந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

#image_title
காதலர் தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் பிப்ரவரி 10ம் தேதி டாடா திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் கவின் மற்றும் அபர்ணா தாஸ் இணைந்து நடித்திருந்தனர்.
ஊதாரி இளைஞனாக திரிந்து கொண்டிருக்கும் கவின் கல்லூரியில் படிக்கும் மாணவி அபர்ணா தாஸை காதலித்து கர்ப்பமும் ஆக்கி விடுகிறார். அதன் பிறகு குழந்தை பிரிந்ததும், அந்த குழந்தையை கவின் பொறுப்பில் விட்டு விட்டு அபர்ணா தாஸ் சென்று விட, குழந்தைக்காக டாடாவாக கவின் எப்படி மாறுகிறான் என்கிற கதையை காமெடி கலந்து கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்தனர்.
இந்நிலையில், வரும் மார்ச் 10ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் டாடா திரைப்படம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் கவின் மற்றும் நாயகி அபர்ணா தாஸ் இருவரும் தங்கள் சமூக வலைதளங்களில் டாடா படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை ஷேர் செய்துள்ளனர்.