Connect with us

சினிமா

விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் மணிகண்டன் கூட்டணியில் வெப் சீரிஸ் அறிவிப்பு

Published

on

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸை அறிவித்துள்ளது. இந்த வெப் சீரிஸில், நடிகர் விஜய் சேதுபதி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தேசியவிருது வென்ற இயக்குநர் மணிகண்டன் இயக்குகிறார்.

இயக்குநர் மணிகண்டன் ‘காக்கா முட்டை’, ‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ‘கடைசி விவசாயி’ போன்ற விமர்சன ரீதியாகக் கொண்டாடப்பட்ட, சூப்பர்ஹிட் படைப்புகளைத் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகராக விளங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழில் வெப் சீரிஸில் அவர் நடிப்பது இதுவே முதல் முறை.

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர மணிகண்டன் கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் பல மடங்கு எகிற வைத்திருக்கிறது.

இந்தப் புதிய ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸின் படப்பிடிப்பு இன்று மதுரை அருகே உசிலம்பட்டியில் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.

7C’s Entertainment Pvt Ltd (P ArumugaKumar) தயாரிக்கும் இந்த வெப் சீரிஸிற்கு இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இசையமைக்க, சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இந்த வெப் சீரிஸில் பங்குபெறவுள்ள மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள்குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

வணிகம்9 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?