Connect with us

சினிமா செய்திகள்

பிக்பாஸ் கவின் நடித்த ‘லிப்ட்’ திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர்!

Published

on

நடிகர் கவின் ஏற்கனவே ’நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தாலும் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கவின் ஹீரோவாக நடித்த ‘லிப்ட்’ என்ற திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது ‘லிப்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐடி அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் கவின், இரவு நேரத்தில் அலுவலகத்தில் தங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்போது அவருக்கு ஏற்படும் வித்தியாசமான அனுபவங்கள், அமானுஷ்ய நிகழ்வுகள், லிப்டில் மாட்டிக்கொள்ளும் நிகழ்வுகள் ஆகியவைதான் இந்த படத்தில் கதை என்று தெரிகிறது.

அதே அலுவலகத்தில் தனியாக மாட்டி கொண்ட அம்ரிதா, கவினுடன் இணைந்து அந்த கட்டிடத்தில் இருந்து தப்பிக்க எடுக்கும் முயற்சிகள் தான் இந்த படத்தின் மீதிக்கதை. இந்த டிரைலரில் உள்ள காட்சிகள் அனைத்தும் த்ரில்லாக இருப்பதை அடுத்து இந்த படம் கண்டிப்பாக கதையம்சத்தை ரசிக்கும் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முழுக்க முழுக்க த்ரில் மற்றும் சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்ட இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் இன்னும் ரசிக்கும் வகையில் இருக்கும் என்றும் எதிர்பாராத காரணத்தினால் இந்த படம் ஓடிடியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வினித் பிரசாத் என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பிரிட்டோ மைக்கேல் என்பவர் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் மிகப்பெரிய பலமே பின்னணி இசை என்று கூறலாம். அந்த அளவுக்கு பின்னணி இசையை இசையமைப்பாளர் வெளுத்து வாங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Custom bio pages, sell products, collect leads, and pass high DR authority Create custom bio pages, sell products, collect leads, and pass high DR authority ..