சினிமா செய்திகள்
கதிருக்கு அடித்தது ஜாக்பாட்.. தளபதி 63ல் விஜய்யுடன் நடிக்கிறார்!

மதயானைக் கூட்டம், கிருமி படங்களின் மூலம் அறிமுகமான நடிகர் கதிருக்கு கடந்த ஆண்டு ஒரு சூப்பர் ஆண்டாக அமைந்தது. பரியேறும் பெருமாள் எனும் தரமான படத்தின் மூலம் பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்களை பெற்றார்.
இந்நிலையில், இந்த ஆண்டும் இன்னொரு சூப்பர் ஆண்டாக அவருக்கு அமையவுள்ளது. ஆம், விஜய்யின் தளபதி 63ல் முக்கியமான ரோலில் நடிக்க நடிகர் கதிருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
முன்னதாக இந்த வாய்ப்பு சிவகார்த்திகேயனுக்கு கிடைக்கும் என்ற தகவல் வந்த நிலையில், சிவகார்த்திகேயன் பிசியாக இருப்பதால், கதிருக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அர்ச்சனா கல்பாத்தி இன்று மாலை 6 மணிக்கு இந்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
தளபதி 63ல் முன்னதாக விஜய்க்கு ஜோடியாக நயன்தாராவும் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை இந்துஜா, காமெடி ரோலில் யோகிபாபுவுடன் நடிகர் விவேக்கும் கமீட் ஆகியுள்ளனர்.
தளபதி 63 வரும் தீபாவளி சரவெடியாக திரைக்கு வரவுள்ளது.


















