இந்தியா
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு 2வது முறையாக கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மிக வேகமாக கொரனோ இரண்டாவது அலை பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்பதும், இரவு நேர ஊரடங்கு உள்பட பல கட்டுப்பாடுகள் அந்தந்த மாநில அரசுகள் பிறப்பிக்கப்பத்துள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் எம்பிக்கள் முதல்வர்களும் கூட கொரனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்கள் கொரனோவால் பாதிக்கப்பட்டு தனிமைப் படுத்திக் கொண்டார் என்ற செய்தியை பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி கர்நாடக முதல்வர் எடியூரப்பா அவர்களுக்கு கொரனோவால் தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே இவர் கொரனோவால் பாதிக்கப்பட்டு குணமான நிலையில் தற்போது 2வது முறையாக கொரனோவால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதனை அடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.





















