சினிமா செய்திகள்
பாகுபலி 2, கேஜிஎப் 2, ஆர்.ஆர்.ஆர் வசூலை முந்தி முதலிடத்தை பிடித்த விக்ரம்!

மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகிய பாலிவுட் படங்கள் எல்லாம் தென்னிந்தியப் படங்களான பாகுபலி 2, கேபிஎப் 2, ஆர்.ஆர்.ஆர் படங்களுடன் மோத முடியாமல் நட்டம் அடைந்து வந்த நிலையில், ஜூன் 3-ம் தேதி வெளியான விக்ரம் படமும் அதனுடன் ரிலீஸான சாம்ராட் ப்ரித்திவிராஜ், தாக்கட் உள்ளிட்ட படங்களும் தோல்வி சந்திக்க வைத்துள்ளது.
விக்ரம் படம் 120 முதல் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள நிலையில், முதல் வாரத்தில் மட்டும் 250 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
தென் இந்தியா மட்டுமல்லாமல் விக்ரம் படத்திற்கு வட இந்தியாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் கேஜிஎப் 2, ஆர்.ஆர்.ஆர்., மாஸ்டர் படங்கள் பெற்ற வசூலை விக்ரம் முந்தியுள்ளது. இரண்டாம் வாரத்தில் பாகுபலி 2 வசூலையும் விக்ரம் திரைப்படம் முந்தும் என கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் இதுவரையில் அதிக வசூலான படமாக 155 கோடி ரூபாயுடன் பாகுபலி 2 உள்ளது. விக்ரம் படம் முதல் வாரத்தில் மட்டும் 131 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

கேஜிஎப் 2 படம் தமிழ்நாட்டில் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. ஆர்.ஆர்.ஆர் படம் 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
விக்ரம் படத்தின் வசூல் தமிழ் சினிமாவின் மிகப் பெரிய வசூலாக பார்க்கப்படுகிறது. விக்ரம் படம் ரிலீஸ் ஆகும் முன்பே கமல் ஹாசனுக்கு 75 கோடி ரூபாய் லாபம் பெற்றுத் தந்தது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் படத்தின் வெற்றிக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் மீதான எதிர்பார்ப்பும், 4 வருடத்திற்குப் பிறகு கமல் திரைப்படம் ரிலீஸ் ஆவதும், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட நடிகர்கள் இந்த படத்தில் நடித்ததே காரணம் என கூறப்படுகிறது.




















