சினிமா செய்திகள்
என்னடைய இந்த நிலைக்கு ரஜினிகாந்த் தான் காரணம்: மனிஷா கொய்ராலா

‘பாபா’ படத்தோல்வியால் தென்னிந்தியாவில் தன் சினிமா பயணம் முடிந்ததாக நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், மனிஷா கொய்ராலா, கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 2002-ல் வெளியான திரைப்படம் ‘பாபா’. இந்த படம் வெளியாவதற்கு முன்பு இந்த படம் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், படம் வெளியான பின்பு படம் படுதோல்வி அடைந்தது. தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை இந்த படம் ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த மனிஷா கொய்ராலா இந்த படத் தோல்வியால் தென்னிந்தியாவில் தனக்கு வாய்ப்பே வராமல் தன்னுடைய சினிமா பயணம் முடிவடைந்தது என மனம் திறந்து பேசியுள்ளார்.

அந்த பேட்டியில் அவர் தெரிவித்திருப்பதாவது, ” தமிழில் கடைசியாக என்னுடைய மிகப்பெரிய படம் ‘பாபா’ தான். அந்த நாட்களில் வெளியான போது மிக மோசமாக தோல்வி அடைந்தது. அந்த படம் வெளியாகி தோல்வி அடைந்தால் தென்னிந்தியாவில் என்னுடைய கரியர் முடிந்து விடும் என்று நினைத்தேன். அதேபோல் தான் நடந்தது. அதன் பிறகு எனக்கு எந்த வாய்ப்புகளும் வரவில்லை.
ஆனால், ஆச்சரியமாக இந்த படம் சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்த பொழுது மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதிலிருந்து ஒன்று புரிந்து கொண்டேன். ரஜினி சாரல் எப்பொழுதுமே தோல்வியை கொடுக்க முடியாது! அப்படியான நல்ல உள்ளம் கொண்ட மனிதர் அவர்” என்று பேசி இருக்கிறார் மனிஷா.