சினிமா செய்திகள்
‘செம தலைவா’ மகள் சொன்ன கமெண்ட்; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் புதுத்தோற்றத்திற்கு மாறியுள்ள புகைப்படத்தை செளந்தர்யா பகிர்ந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார்.
பான் இந்தியா படமாக உருவாகி வரக்கூடிய இதில் நடிகர்கள் சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டப் பலரும் நடிக்கின்றனர். ’டாக்டர்’, ’பீஸ்ட்’ படங்களுக்குப் பிறகு மீண்டும் நெல்சன் -அனிருத் கூட்டணி ‘ஜெயிலர்’ படத்தில் இணைந்திருக்கிறார்கள். இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
படக்குழு அடுத்த ஷெட்யூலுக்காக கொச்சி சென்றபோது விமானநிலையத்தில் ரஜினிகாந்த்தின் புகைப்படங்கள் வைரலாகின. அப்போதெல்லாம் லேசான தாடியுடன் வலம் அந்த ரஜினிகாந்த் தற்போது புதுகெட்டப்பிற்கு மாறியுள்ளதாக அவரது இளைய மகளும் இயக்குநருமான செளந்தர்யா ரஜினிகாந்த் புகைப்படங்களைப் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.
மேலும் அவர் கூறியிருப்பதாவது, ‘மும்பையில் என் அன்பு அப்பாவுடன் நீதா அம்பானி ஆண்டியின் கல்ச்சுரல் செண்டர் ஓப்பனிங்கிற்கான்க வந்துள்ளேன். அப்பாவின் புதுத்தோற்றம் இது! செம தலைவா!!’ எனத் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.