சினிமா
’கமல் தயாரிப்பில் நடிக்காமல் போனது ஏன்?’- உதயநிதி விளக்கம்!

கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்க முடியாமல் போனது குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா உள்ளிட்டப் பலர் நடிப்பில் இந்த மாதம் 17ம் தேதி ‘கண்ணை நம்பாதே’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படம் தொடர்பாக ஊடகங்களுக்கு அளித்துள்ளப் பேட்டியில் கமல் தயாரிப்பில் நடிக்காமல் போனது பற்றி உதயநிதி விளக்கம் கொடுத்துள்ளார்.

Udayanidhis
அதில் அவர் பேசியிருப்பதாவது, ’கமல்ஹாசன் சார் தயாரிப்பில் நடிக்க இருந்தப் படத்தை உங்களைப் போலவே நானும் எதிர்பார்த்திருந்தேன். ஆனால், இப்போதுள்ள என்னுடைய அரசியல் சூழல் காரணமாக அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. நான் நடிக்கவில்லை என்றாலும், அந்தப் படத்தை வேறு யாராவது வைத்து நடிக்க வைக்கலாம் என்று அவரிடம் யோசனை சொன்னேன்.
ஆனால் கமல் சார் அதை மறுத்து, ‘இது உங்களுக்கென்று எழுதப்பட்டக் கதை. நீங்கள் நடித்தால்தான் நன்றாக இருக்கும். என்றைக்காக இருந்தாலும் இந்தக் கதை உங்களுக்காகக் காத்திருக்கும்’ என்று சொன்னார். அதை என்னால் மறுத்துப் பேச முடியவில்லை. அதனால்தான் அவர் தயாரிக்க இருந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டது’ என்று கூறியுள்ளார் உதயநிதி ஸ்டாலின்.