சினிமா செய்திகள்
‘காட்டேரி’ பட வெளியீட்டை தள்ளி வைத்த ஸ்டூடியோ க்ரீன்!

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மற்றும் புதிய வகை கொரோனா பரவி வருவதால் ‘காட்டேரி’ பட வெளியீட்டைத் தள்ளி வைப்பதாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதாக வெளியாகும் தகவல்கள் அடிப்படையில், எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.
இப்போது நிலவும் குழப்பமான மற்றும் நிலையில்லாத் தன்மையைக் கருத்தில் கொண்டு, காட்டேரி திரைப்படத்தில் பணியாற்றிய பல்வேறு தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்பும் சரியான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கிலும் எங்கள் தயாரிப்பில், டிசம்பர் 25-ம் தேதி வெளிவர இருந்த ‘காட்ரேரி’ திரைப்பட வெளியீட்டைத் தற்காலிகமாகத் தள்ளி வைப்பதாக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
#PressRelease#KatteriReleasepostponed pic.twitter.com/lk7AWrYCb9
— Studio Green (@StudioGreen2) December 23, 2020
மேலும் இந்த கொரோனாவின் தாக்கம் குறைந்தவுடன் காட்டேரி திரைப்படம் வெளியாகும். விரைவில் தேதி அறிவிக்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டேரி படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். பட வெளியீட்டு உரிமையை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.