தமிழ்நாடு
Breaking | இனி கர்ப்பிணிப் பெண்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை தேவையில்லை: சுகாதாரத்துறை

தமிழ்நாட்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை தேவையில்லை என தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள சுகாதாரத் துறை, கொரோனா தொற்று அறிகுறிகளான, இருமல், தும்மல், சளி, காய்ச்சல், தொண்டை வலி போன்றவை இல்லாத கர்ப்பிணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிசோதனை செய்யப்படும்.
மேலும் விமானம் மூலமாகத் தமிழ்நாடு வரும் நபர்களுக்கு கட்டாய கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுவதும் நிறுத்தப்படுவதாகத் தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.