சினிமா
சிவகார்த்திகேயன் தொடுத்த சம்பள பாக்கி வழக்கு ஒருவழியா செட்டில் ஆனது!

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் ராஜேஷ். எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது.
ஆனால், சொன்னபடி தனக்கான சம்பளத்தை தரவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்தார்.

#image_title
வெறும் 11 கோடி ரூபாயை மட்டுமே கொடுத்து விட்டு 4 கோடி ரூபாயை ஏமாற்றி விட்டார் என அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் விசாரித்து வந்த நிலையில், தற்போது இருவரும் இந்த வழக்கு தொடர்பாக பேச்சுவார்த்தை மூலமாக சமரசம் செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டு வழக்கு முடித்தவைக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான மிஸ்டர் லோக்கல் திரைப்படம் படு தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. ஞானவேல் ராஜாவுடன் ஏற்பட்ட சம்பள பாக்கி பிரச்சனை காரணமாக அதன் பிறகு அந்த நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றாமல் ஒதுங்கினார் சிவகார்த்திகேயன். மேலும், தனியாக தனது பெயரிலேயே சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் சிவகார்த்திகேயன் ஆரம்பித்து கனா, வாழ் உள்ளிட்ட படங்களையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள பத்து தல திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வர உள்ள நிலையில், இந்த சம்பள பாக்கி பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.