Connect with us

சினிமா செய்திகள்

என்னது காப்பான் கதையும் திருட்டு கதையா?

Published

on

சூர்யா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள காப்பான் படத்தின் கதை தன்னுடையது என கதாசிரியர் ஜான் சார்லஸ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் காப்பான். இந்த படத்தில் கேரளா சூப்பர்ஸ்டார் மோகன்லால் இந்திய பிரதமராக நடித்துள்ளார். மேலும், ஆர்யா மற்றும் சாயிஷா இந்த படத்தில் இடம்பெற்றுள்ளனர். அடுத்த மாதம் செப்டம்பர் 20ம் தேதி காப்பான் படம் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில், காப்பான் படத்தின் கதை தான் சரவெடி என்ற தலைப்பில் எழுதிய கதை என்று குரோம்பேட்டையை சேர்ந்த கதாசிரியர் ஜான் சார்லஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பொதுவாக விஜய் படங்களுக்கு வரும் கதை திருட்டு பிரச்னை தற்போது சூர்யாவின் காப்பான் படத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், செப்டம்பர் 4ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Zarraffa’s coffee opens its store in victoria | franchise business in melbourne business franchise.