பிற விளையாட்டுகள்
ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய பெண்கள் அணியும் தோல்வி: வெண்கலம் கிடைக்குமா?

தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் அந்த போட்டியில் இந்திய அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் ஆடவர் ஹாக்கி அணி தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் மகளிர் ஹாக்கி அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் இன்று அர்ஜென்டினா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே அரையிறுதி நடைபெற்றது. இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்த நிலையில் முதல் பாதியில் இந்திய மகளிர் அணி ஒரு கோல் போட்டு முன்னிலையில் இருந்தது.
இரண்டாம் பாதியில் அர்ஜென்டினா அணி ஒரு கோல் போட்டதை அடுத்து இரு அணிகளும் சம நிலையில் இருந்தது. இதனை அடுத்து மூன்றாவது பாதியில் அர்ஜென்டினா அணி மேலும் ஒரு கோல் போட்டது. இதனால் அந்த அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதனை அடுத்து நான்காவது பாதியில் இந்திய அர்ஜென்டினா அணிகள் இரண்டுமே கோல் எதுவும் போடவில்லை என்பதால் 2-1 என்ற கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த நிலையில் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் இந்திய மகளிர் அணி பிரிட்டன் அணியுடன் மோத உள்ளது என்பதும் இந்த போட்டியில் இந்திய அணி வென்றால் வெண்கல பதக்கம் கிடைக்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது.




















