பர்சனல் பைனான்ஸ்
ஏடிஎம் மையங்களில் கூகுள் பே, போன் பே பயன்படுத்தி பணம் எடுப்பது எப்படி?

அவசரமாகப் பணம் வேண்டும், ஆனால் ஏடிஎம் கார்டு இல்லையா? இனி கவலை வேண்டாம். உங்கள் போனில் உள்ள கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலமாகவும் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கலாம்.
யூபிஐ செயலிகள் மூலமாக பணம் எடுக்கும் இந்த முறைக்கு Interoperable cardless cash withdrawal சேவை என கூறுகின்றனர்.
அனைத்து வங்கி ஏடிஎம் மையங்களிலும் இந்த சேவையை வழங்க ஆர்பிஐ முழு அனுமதி வழங்கியுள்ளது. இந்த சேவை மூலமாக ஏடிஎம் ஸ்கிம்மர் இயந்திரங்கள் மூலம் நடைபெறும் மொசடிகளும் குறையும் என கூறப்படுகிறது.
ஆனல் இந்த சேவையை பயன்படுத்தி அதிகபட்சமாக 5000 ரூபாய் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும்.
ஏடிஎம் மையங்களில் கூகுள் பே, போன் பே பயன்படுத்தி பணம் எடுப்பது எப்படி?
படி 1: ஏடிஎம் திரையில் QR குறியீடு மூலம் பணம் எடுக்கும் சேவையை தேர்வு செய்யவும்.
படி 2: உங்கள் போனில் உள்ள கூகுள் பே, போன் பே போன்ற ஏதேனும் ஒரு யூபிஐ செயலி பயன்படுத்தி QR குறியீட்டை ஸ்கான் செய்யுங்கள்.
படி 3: தொடர்ந்து எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்பதை உள்ளிட்டு, பண பரிவர்த்தனைக்கான பின் எண்ணை உள்ளிட்டால் போதும், அடுத்த சில நொடிகளில் ஏடிஎம் இயந்திரம் பணத்தை விநியோகிக்கும்.
கட்டணம் எவ்வளவு?
யுபிஐ செயலிகள் மூலமாக ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் போது கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கக் கூடாது என ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது.
மேலும் இந்த சேவையை பயன்படுத்தி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க இலவச பரிவத்தனை எண்ணிக்கை வரம்புகள் இல்லை. எனவே ஒரு மாதத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்.