தமிழ்நாடு
தமிழ்நாடு ரேஷன் கடைகளில் இனி யூபிஐ மூலம் பணம் செலுத்தலாம்!

தமிழ்நாட்டில் உள்ள 37,328 ரேஷன் கடைகளில் ஒரு ஆண்டில் யூபிஐ மூலம் பணம் பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது தமிழ்நாட்டில் உள்ள 10,661 ரேஷன் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் பெறும் வசதிகள் உள்ளன.
இதற்காக எல்காட் நிறுவனம் ரேஷன் கடைகளுக்கு பிஓஎஸ் சாதனங்கள், ஸ்கினார்கள் மற்றும் ஆட்டோமெட்டிக் பில்லிங் மெஷின் போன்றவற்றை விநியோகிக்க முடிவு செய்துள்ளது. இந்த சாதனங்கள் வழங்க ஒரு ரேஷன் கடைக்கு 20,000 ரூபாய் வரை செலவு ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ரேஷன் கடைகளில் பில்லிங் மற்றும் எடை இயந்திரங்கள் டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், பொருள் திருட்டு குறைந்துள்ளது.

இப்போது யூபிஐ பரிவர்த்தனைகளும் வரும் எனில், பணம் நேரடியாக கால தாமதம் இன்றி அரசின் கணக்கிற்குச் சென்று சேரும்.
மேலும் ரேஷன் கடைகளில் ஐஎஸ்ஓ சான்றிதழ் பெறவும் இது உதவும். தற்போது தரமான முறையில் ரேஷன் பொருட்கள் வழங்கும் 10000 ரேஷன் கடைகளுக்கு ஐஎஸ்ஓ 9 001 சான்றிதழ் உள்ளன.
2000 மேற்பட்ட ரேஷன் கடைகளில் பாதுகாப்பான பொருட்கள் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கான ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் யூபிஐ பரிவர்த்தனைக்கு எதிராக வணிகர்கள் முடிவுகள் எடுத்து வரும் நிலையில், ரேஷன் கடைகள் போன்றவற்றில் யூபிஐ பரிவர்த்தனை அறிமுகம் செய்வது மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.






















