வணிகம்
10 நொடியில் யூபிஐ பரிவர்த்தனை! போன் பே, கூகுள் பே செயலிகளுக்கு புதிய விதிகள்!

ஆகஸ்ட் 1 முதல் புதிய யூபிஐ விதிகள் அமலுக்கு வர உள்ளதாக தேசிய பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய விதிகள் கூகுள் பே, போன் பே என எல்லா செயலிகள் மற்றும் வங்கிகள் யூபிஐ சேவைகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின் படி யூபிஐ செயலிகள் பயன்படுத்தி ஒரு நாளௌக்கு 50 முறை மட்டுமே வங்கி இருப்பு (பேலன்ஸ்) சரி பார்க்க முடியும்.
யூபிஐ செயலி மூலமாக செய்யப்படும் பணப்பரிவர்த்தனை நேரம் தற்போது 30 நொடிகளாக உள்ளது. அதனை 10 முதல் 15 விநாடிகளாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
செயல் இலந்த (Failed) பரிவர்த்தனை பிரச்சனைகள் 10 விநாடிகளில் சரி செய்யப்படும்.
பரிவர்த்தனை முழுமையடைந்துள்ளதாக என்பதை இனி பண பரிவர்த்தனை சேவை வழங்குநர்களால் சரிபார்க்க முடியும்.
எந்த வங்கி கணக்குகள் எல்லாம் எல்லாம் யூபிஐ செயலியில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை ஒரு நாளைக்கு 25 முறை மட்டுமே சரிபார்க்க முடியும்.
யூபிஐ செயலில் பயனாளர் பெயரை இனி திருத்த முடியாது. இந்த விதியை ஜூன் 30-ம் தேதிக்குள் அணைத்து வங்கிகளும் அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.



















