Connect with us

கிரிக்கெட்

55 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வென்றது குஜராத் டைட்டன்ஸ்!

Published

on

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

குஜராத் அணி 207 ரன்கள்

குஜராத் அணியில் சாஹா, ஷுப்மன் கில் களமிறங்கினர். சாஹா 4 ரன்கள், ஹர்திக் 13 ரன்கள், விஜய் ஷங்கர் 19 ரன்கள் மற்றும் கில் அரைசதம் அடித்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் மில்லர் – மனோகர் ஜோடி 5வது விக்கெட்டுக்கு அதிரடியில் கலக்க, குஜராத் டைட்டன்ஸ் ஸ்கோர் எகிறியது. மனோகர் 42 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

கடைசி கட்டத்தில் மில்லர் – திவாதியா இணைந்து இமாலய சிக்சர்களை விளாச, குஜராத் அணி 200 ரன்களைத் தாண்டியது. மில்லர் 46 ரன் விளாசி அவுட்டானார். குஜராத் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 207 ரன் குவித்தது. மும்பை பந்துவீச்சில் சாவ்லா 2, அர்ஜுன், பெஹரன்டார்ப், மெரிடித், கார்த்திகேயா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

குஜராத் வெற்றி

அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை எடுத்து, 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மும்பை அணித் தரப்பில் வதேரா அதிகபட்சமாக 40 ரன்களை விளாசினார். குஜராத் பந்துவீச்சில் நூர் அகமது 3 விக்கெட், ரஷித்கான், மோகித் சர்மா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized2 மணி நேரங்கள் ago

ரூ.800 கோடி பட்ஜெட்டில் இணையும் ரஜினி – கமல்: இந்தியத் திரையுலகையே அதிரவைக்கும் நெல்சனின் மெகா கூட்டணி!

இந்தியா2 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 02.11.2026

Uncategorized6 மணி நேரங்கள் ago

டிஜிட்டல் மோசடியில் வாடிக்கையாளர் பணம் பறிபோனால் வங்கிகளே பொறுப்பு! இழந்த தொகைக்குக் குறையாமல் இழப்பீடு வழங்க விதிகள் வேண்டும் – உச்சநீதிமன்றம் அதிரடி!

இந்தியா19 மணி நேரங்கள் ago

பொருளாதார நிலைமையை தீர்மானிக்கும் குரு கிரகம்

இந்தியா20 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.11.2026

இந்தியா22 மணி நேரங்கள் ago

இந்தியாவிலேயே மிகப்பெரிய தங்க விமானம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அமைக்கப்பட்டுள்ளது

இந்தியா23 மணி நேரங்கள் ago

தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

இந்தியா23 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 01.11.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்னும் 10 ஆண்டுகளில் சம்பளமே இல்லாத உலகம் உருவாகப் போகிறதா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 31.10.2026

Translate »
scale your rankings with free backlinks & website citations.