பர்சனல் ஃபினான்ஸ்
ஆதார் நம்பரை மறந்துவிட்டீர்களா? ஈஸியா தெரிந்துகொள்வது எப்படி?

ஆதார் கார்டு இன்றைய காலக்கட்டத்தில் அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது. ஆனால், உங்கள் ஆதார் எண் மறந்துவிட்டால் கவலைப்பட தேவையில்லை. அதை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் எளிதாக மீட்டெடுக்கலாம். சில முக்கிய ஆவணங்களின் உதவியுடன் உங்கள் ஆதார் எண்ணைப் பெறலாம்.
ஆதார் எண்ணை ஆன்லைனில் மீட்டெடுப்பது எப்படி?
உங்கள் ஆதார் எண்ணை எங்கேயும் குறித்துவைக்கவில்லை மற்றும் மறந்துவிட்டால், அதை UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று கண்டுபிடிக்கலாம். இதற்காக, உங்கள் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடி ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- முதலில், UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- “My Aadhaar” பிரிவில் “Retrieve Lost or Forgotten EID/UID” என்பதை தேர்வு செய்யவும்.
- உங்கள் பெயர், பின் கோடு (PIN Code), மற்றும் பாதுகாப்பு கேப்ட்சாவை உள்ளிடவும்.
- உங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணுக்கு OTP வரும்.
- OTPஐ உள்ளிடியுடன், SMS அல்லது மின்னஞ்சல் மூலம் உங்கள் ஆதார் எண் கிடைக்கும்.
mAadhaar செயலியில் ஆதார் எண்ணை காணலாம்
UIDAI இன் mAadhaar செயலி மூலம் கூட ஆதார் எண்ணைப் பார்க்கலாம்.
- முதலில் Google Play Store அல்லது Apple App Store-இல் இருந்து mAadhaar செயலியை பதிவிறக்கவும்.
- உங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணுடன் செயலியில் உள்நுழையவும்.
- உள்நுழைந்தவுடன், உங்கள் ஆதார் எண் மற்றும் முக்கிய தகவல்களை காணலாம்.
ஆதார் சேவை மையத்திற்குச் சென்று பெறலாம்
ஆன்லைனில் ஆதார் எண்ணைப் பெற முடியவில்லை என்றால், நேரடியாக ஆதார் சேவை மையத்திற்குச் சென்று பெறலாம்.
- PAN கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடையாள ஆவணங்களை எடுத்துச் செல்லவும்.
- ஆதார் மைய ஊழியர்கள் உங்கள் தகவல்களை சரிபார்த்து ஆதார் எண்ணை வழங்குவார்கள்.





















