தமிழ்நாடு
முக்கிய அறிவிப்பு.. இந்த தேதிகளில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தவர்கள் உடனே இதை செய்யுங்கள்!
Published
2 weeks agoon
By
Tamilarasu
தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் ஜனவரி 31-ம் தேதி வரை நடைபெற்று வந்தது.
இதனைச் செய்யத் தொடங்கியதிலிருந்து பல்வேறு தொழில்நுட்ப கேளாரால் மக்கள் மின் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க முடியாமல் திணறி வந்தனர்.
இந்நிலையில் 2022-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தவர்கள் அதனை மீண்டும் செய்ய வேண்டும்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாகக் குறிப்பிட்ட இந்த தேதிகளில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்த விவரங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
மின் எண்ணை ஆதார் எண்ணை இணைப்பதில் யாருக்கெல்லாம் கோளாறு ஏற்பட்டுள்ளதோ அவர்களுக்கு எல்லாம் எஸ்எம்எஸ் மூலம் அறிவிப்பு அனுப்பப்படும். அவர்கள் எல்லாம் மீண்டும் இணைப்பை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த இணைப்பை ஆன்லைன் மூலம் செய்ய முடியாது. நேரடியாக மின்வாரிய அலுவலகங்கள் சென்றே செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You may like
-
விரைவில் ஊட்டி, ஏற்காட்டிற்கு ஹெலிகாப்டரில் சுற்றுலா செல்லலாம்.. தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் அசத்தல் அறிவிப்பு!
-
சீனாவுக்கு போட்டியாக உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் மேட்-இன்-தமிழ்நாடு தயாரிப்பு!
-
தமிழ்நாட்டில் தொழிற்சாலையைத் தொடங்கும் பிரபல ஷூ நிறுவனம்.. எத்தனை கோடி தெரியுமா?
-
தமிழ்நாட்டில் மெகா சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் ரூ.25,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் டாடா குழுமம்.. எந்த மாவட்டத்தில் தெரியுமா?
-
தமிழ்நாட்டில் உள்ள சுத்தமான கடற்கரைகள் எவை? அசுத்தமான கடற்கரைகள் எவை?