சினிமா
அது அந்த நடிகையின் மடியா? இல்லை நாற்காலியா? ஆஸ்கர் மேடையில் ராக் செஞ்ச அட்டகாசம்!

WWE சாம்பியனாக இருந்த ராக் ஹாலிவுட் நடிகராக டுவைன் ஜான்சனாக மாறி பல பிரம்மாண்ட படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு டுவைன் ஜான்சன் நடிப்பில் பிளாக் ஆடம், ரெட் நோட்டீஸ் உள்ளிட்ட ஆக்ஷன் படங்கள் வெளியாகி பல ஆயிரம் கோடிகள் வசூல் செய்து சாதித்தன.
இந்நிலையில், ஆஸ்கர் 2023ன் முதல் விருதான சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான விருதினை வழங்க ராக் டுவைன் ஜான்சன் நடிகை எமிலி பிளன்ட் உடன் ஆஸ்கர் மேடை ஏறினார்.

#image_title
ஆஸ்கர் விருது விழாவில் கலந்து கொண்ட நடிகர் டுவைன் ஜான்சன் தன்னுடன் ஜங்கிள் க்ரூஸ் படத்தில் ஜோடியாக நடித்த நடிகை எமிலி பிளன்ட் உடனே ஜோடி போட்டுத் திரிந்தார்.
ஒரு கட்டத்தில் எமிலி பிளன்ட் நாற்காலியில் அமர்ந்திருக்க அவர் அருகே சென்று அமராமல் எமிலி பிளன்ட் மடி மீதே நடிகர் டுவைன் ஜான்சன் அமர்ந்து கொண்டு கொடுத்த போஸ் ஆஸ்கர் அதிகாரப்பூர்வ பக்கத்திலேயே இடம்பெற்று உலகளவில் வைரலாகி வருகிறது.

#image_title
WWE வீரராக சண்டைப் போட்டு வந்த டுவைன் ஜான்சனை ரசிகர்கள் ராக் என்றே செல்லமாக அழைத்து வந்தனர். கடந்த 2001ம் ஆண்டு வெளியான தி மம்மி ரிட்டர்ன்ஸ் படத்தில் ஸ்கார்பியன் கிங்காக நடித்த ராக் அடுத்ததாக ஸ்கார்பியன் கிங் என்கிற படத்தில் ஹீரோவாக ஹாலிவுட்டில் அறிமுகமானார்.
ஃபாஸ்ட் ஃபைவ், ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 7, ஜிஐஜோ உள்ளிட்ட படங்களில் சப்போர்ட்டிங் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்து வந்த ராக் அதனை தொடர்ந்து சான் ஆண்ட்ரியாஸ், பே வாட்ச், ஜுமாஞ்சி, ஸ்கைஸ்கிராப்பர், ரெட் நோட்டீஸ், பிளாக் ஆடம், ரெட் ஒன் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்து பல நூறு கோடிகள் ஒரு படத்துக்கு சம்பளமாக வாங்கி வருகிறார்.