சினிமா
நாட்டு நாட்டு பாட்டுக்கு கொடுத்த ஆஸ்கரை ஏன் நாக்க மூக்கா பாட்டுக்கு கொடுக்கல? நகுல் போட்ட ட்வீட்!

காதலில் விழுந்தேன் படத்தில் இடம்பெற்ற நாக்க மூக்கா பாடலுக்கு ஏன் ஆஸ்கர் விருது கொடுக்கவில்லை என வைரலாகும் மீமை ஷேர் செய்து நடிகர் நகுல் போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை அட ஆமாம்பா.. ஏன் கொடுக்கல என்றே யோசிக்க வைத்திருக்கிறது.
இந்திய படைப்புகள் ஆஸ்கர் வெல்லாத வரைக்கும் இந்திய படங்கள் எல்லாம் வெறும் டுபாக்கூர் அதனால் தான் ஆஸ்கர் கிடைக்கவில்லை என உருட்டினார்கள்.

#image_title
அதே நேரத்தில் தற்போது ஒன்றுக்கு இரண்டு பிரிவுகளில் ஆஸ்கர் விருது வென்ற நிலயில், அதெல்லாம் சும்மா பேச்சுப்பா காசு கொடுத்து ஆஸ்கர் விருதை வாங்கிடலாம் என பெரிய உருட்டாக உருட்டி வருகின்றனர்.
என்னதான் தேர்தலுக்கு எல்லா கட்சியும் செலவு செய்தாலும், வெற்றி பெறுவது ஒரு கட்சி தான் என்பது போலத்தான் இந்த ஆஸ்கர் விருதும் என்றும் சிலர் அதற்கான விளக்கங்களையும் கூறி வருகின்றனர்.

#image_title
இந்நிலையில், நகுல் நடித்த காதலில் விழுந்தேன் படத்தில் இடம்பெற்ற விஜய் ஆண்டனி இசையில் உருவான நாக்க மூக்கா பாடல் ஏன் ஆஸ்கர் விருது வெல்லவில்லை என்கிற மீம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அதை பார்த்து ஷாக்கான நகுல், இது எனக்கு குபீர்னு சிரிப்பை வரவழைத்து விட்டது. ஆஸ்கர் வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கும், என் பாட்டை மறக்காமல் மீம் போட்ட நல்ல உள்ளத்துக்கும் நன்றி எனக் கூறியுள்ளார்.