சினிமா
’நாட்டு நாட்டு’ நல்ல பாடலே இல்லை.. எல்லாமே லாபி.. இளையராஜா ரசிகர்கள் விளாசல்!

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் மரகதமணி கீரவாணி இசையமைப்பில் உருவான ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது வென்ற நிலையில், இளையராஜா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அந்த பாடலையும் அதன் இசையமைப்பாளரான கீரவாணியையும் கிழித்துத் தொங்கவிட்டு வருகின்றனர்.
’நாட்டு நாட்டு’ பாடலுக்கு எல்லாம் ஆஸ்கர் கொடுக்கிறாங்கன்னா இளையராஜா இந்நேரம் 100 ஆஸ்கர் வாங்கி இருக்கணும் என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கொந்தளித்து வருகின்றனர்.

#image_title
மேலும், இயக்குநர் ராஜமெளலி கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் செலவு செய்து தான் இந்த ஆஸ்கர் விருதை வாங்கி இருக்கிறார் என்றும் இதில், லாபி நடந்துள்ளதாகவும் பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.
அதே நேரம் டோலிவுட் ரசிகர்கள் அப்படி இளையராஜா ரசிகர்கள் கான்செப்ட் படி லாபி செய்தே வாங்கினால், சிறந்த இயக்குநருக்கான விருதையே ராஜமெளலி வாங்கி இருக்கலாமே என்றும், ஆர்ஆர்ஆர் நாட்டு நாட்டு பாடலுடன் போட்டியிட்ட வக்காண்டா ஃபாரெவர், டாப் கன் உள்ளிட்ட பல ஆயிரம் கோடி ஹாலிவுட் படங்களிடம் இல்லாத பணத்தையா ராஜமெளலி கொடுத்து இந்த ஒரு ஆஸ்கர் விருதை வாங்கி உள்ளார் என்று இளையராஜா ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

#image_title
மேலும், சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலை படத்தின் பாடலே காப்பி அடித்த பாடல் என்றும் பாடல் லிரிக் வீடியோவில் தமிழ் எழுத்துப் பிழைகள் இருப்பதையே இளையராஜா கண்டுக்கவில்லை இவருக்கு எப்படி ஆஸ்கர் கிடைக்கும் என்றும் கலாய்த்து வருகின்றனர்.
ஏ.ஆர். ரஹ்மான் ஹாலிவுட் படத்துக்கு ஆஸ்கர் விருது வாங்கிய போது தமிழ் சினிமா ரசிகர்கள் அப்படி கொண்டாடி விட்டு டோலிவுட் திரையுலகில் இருந்து ஒருத்தர் ஆஸ்கர் வாங்கினால் கொண்டாட மனம் இல்லை என்றாலும் பரவாயில்லை. லாபின்னு சொல்ல நா கூசவில்லையா என்று கீரவாணி ரசிகர்கள் பதிலுக்கு கிழித்துத் தொங்க விட்டு வருகின்றனர்.
இளையராஜா தான் தனது மானசீக இசை குரு என பல மேடைகளில் கீரவாணியே பாராட்டி உள்ளார். மேலும், கோல்டன் குளோப் வாங்கி வந்ததும் கீரவாணி மற்றும் ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த பாராட்டுக்களை இளையராஜாவே தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ரசிகர்கள் விஜய் vs அஜித் சண்டையை இங்கே போட வேண்டாம் என்றும் பொதுவான ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.