சினிமா
‘RRR2’ கதை சொன்ன கீரவாணி; சம்மதம் சொன்ன ராஜமெளலி!

இயக்குநர் ராஜமெளலி ‘ஆர்.ஆர்.ஆர்.2’ படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வருடம் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் வெளியானது. படம் வெளியாகி உலக அளவில் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் இப்பொழுது அந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் வென்று உலக கவனத்தை ஈர்த்துள்ளது இந்தத் திரைப்படம்.

Rajamouli
இந்த படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி இப்பொழுது ஆஸ்கர் விருது வென்றுள்ளார். இதன் பிறகு அளித்துள்ள பேட்டியில் இயக்குநர் ராஜமெளலி ‘ஆர்.ஆர்.ஆர் 2’ படம் குறித்தான அப்டேட்டை கொடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘இந்த படத்தின் ஒன்லைன் குறித்து இசையமைப்பாளர் கீரவாணி சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அந்த கதையை என் தந்தையிடம் சொல்லி திரைக்கதையாக டெவலப் செய்ய சொல்லி இருக்கிறேன். அதற்கான பணியில் இப்போது என் தந்தை ஈடுபட்டுள்ளார். அந்த பணி முடிந்ததும் நிச்சயமாக ‘ஆர்.ஆர்.ஆர்.2′ படம் ஆரம்பிக்கும். அது முடிந்ததும் படம் குறித்தான அடுத்தடுத்த அப்டேட்களை விரைவில் தர இருக்கிறோம்’ எனக் கூறியுள்ளார் ராஜமெளலி.