Connect with us

சினிமா செய்திகள்

பீஸ்ட் படம் ஒரு நோய், புரிதல் இல்லாமல் எடுத்திருக்கின்றார்கள்: இயக்குனர் அமீர்

Published

on

பீஸ்ட் திரைப்படம் உருவாகி இஸ்லாமாபோபியா, என்ற நோய் என்றும் புரிதல் இல்லாமல் இந்தப் படத்தை இயக்குனர் எடுத்திருக்கலாம் என்றும் இயக்குனர் அமீர் பேட்டி அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்த படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது மட்டுமின்றி ஒருசில இஸ்லாமிய அமைப்புகளும் இந்த படத்திற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

அது மட்டுமின்றி குவைத் உள்பட ஒருசில நாடுகள் இந்த படத்தை தடை செய்தன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பீஸ்ட் படம் குறித்து இயக்குனர் அமீர் கூறும்போது பீஸ்ட் ஒரு இஸ்லாமாபோபியா என்ற நோய் என்றும் பத்திரிகையில் வெளியான செய்திகளின் அடிப்படையிலும் ஊடகத்தின் செய்திகளை பார்த்துக்கொண்டும் வணிகரீதியாக இயக்குனர்கள் எடுக்கக் கூடிய படம்தான் பீஸ்ட் என்றும், இது அரசியல் புரிதலுடன் எடுக்கவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். பீஸ்ட் குறித்து இயக்குனர் அமீர் அளித்த இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Video previews countdown.