சினிமா
’ரஜினி நல்ல நடிகரா?’- அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு!

ரஜினியின் நடிப்புக் குறித்து இயக்குநர் அமீர் தெரிவித்துள்ள கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
’மெளனம் பேசியதே’, ‘ராம்’, ’பருத்திவீரன்’ போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் ராம். நேற்று ‘செங்களம்’ தொடரின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது. இதில் ஆஸ்கர் விருதுகள் குறித்து நடிகர் அமீர் பேசத் தொடங்கினார். “இந்தியாவின் மிகச்சிறந்த நடிகரான சிவாஜி கணேசனுக்கு மிகத் தாமதமாக ‘தேவர் மகன்’ படத்திற்காகக் கொடுக்கப்பட்டது. இதை வருத்தத்துடன் சிவாஜியே ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.
அதேபோல, 2007-ல் வெளியான ’சிவாஜி’ படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த்திற்கு மாநில விருது கொடுக்கப்பட்டது. அவர் சிறந்த பொழுதுபோக்காளர், சூப்பர் ஸ்டார். ஆனால், இந்தப் படத்தில் அவர் சிறந்த நடிகர் என்பதற்கு விருது கொடுத்ததற்கு ஏற்க முடியுமா? விருதுகள் அனைத்தும் லாபி மூலமே பெறப்படுபவை” என்றார் அமீர். ரஜினி சிறந்த நடிகர் இல்லையா? ‘ஆறில் இருந்து அறுபது வரை’, ‘முள்ளும் மலரும்’ போன்ற படங்களில் அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தவில்லையா? என இப்போது அமீரின் கருத்துக்கு பலரும் இணையத்தில் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.