சினிமா செய்திகள்
’பீஸ்ட்’ படப்பிடிப்பின்போது நிகழ்ந்த பிறந்த நாள் கொண்டாட்டம்: வைரல் வீடியோ

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது பிறந்தநாள் கொண்டாட்டம் கொண்டாடிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
’பீஸ்ட்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் நடிகை அபர்ணா தாஸ் என்பதும் அவர் அந்த படத்தின் கதைக்கு திருப்புமுனையாக இருந்தவர் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தில் அவருடைய நடிப்புக்கு வாழ்த்துக்களும் குவிந்த நிலையில் ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பின்போது அவர் பிறந்த நாள் கொண்டாடிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் விஜய் கேக் மேலுள்ள மெழுகுவர்த்தி ஏற்றுவது போலவும் அதன் பின்னர் கேக்கை விஜய்க்கு அபர்ணாதாஸ் ஊட்டுவது போலவும் உள்ள காட்சிகள் உள்ளன. இந்த கொண்டாட்டத்தில் விஜய் மட்டுமின்றி நெல்சன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
’பீஸ்ட்’ pஅடத்தின் படப்பிடிப்பின் போது பிறந்தநாளை கொண்டாடியது தனக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது என்றும் அந்த நாள் தனக்கு ஸ்பெஷலான தினம் என்றும் அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது என்றும் அபர்ணா தாஸ் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகின்றனர்.
Just posting this video here because it’s very special for me 😊❤️
Throwback to beast days ❤️😊#bestbirthdayever #favoritepeople #beast days pic.twitter.com/URpLmNeYU0— Aparna Das (@aparnaDasss) May 5, 2022