Connect with us

சினிமா செய்திகள்

விஷாலுடன் ஜோடி சேரும் பிரபுதேவா படத்தின் நாயகி!

Published

on

நடிகர் விஷாலுக்கு ஜோடியாக பிரபுதேவா நடித்த படத்தின் நடிகை ஒருவர் ஒப்பந்தமாகியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

விஷால் நடிப்பில் உருவாகும் 31வது படம் குறித்த அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தின் பூஜை இன்று காலை சென்னையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. து.பா சரவணன் என்பவர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகவிருக்கும் இந்த படத்தில் விஷால் நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை அவரே தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிக்க பலர் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் தற்போது டிம்பிள் ஹயாதி என்பவர் இந்த படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே பிரபுதேவா, தமன்னா நடித்த ’தேவி 2’ என்ற படத்தில் நடித்தவர் என்பது அந்த படத்தின் மூலம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் மேலும் ஒரு நாயகி நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்க உள்ளதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்து விட்டு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized40 minutes ago

பிப்ரவரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஜாதி, மதம், ஆதார் விபரம் கேட்க முடிவு

இந்தியா3 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.10.2026

இந்தியா21 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 28.10.2026

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 28.10.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 27.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.10.2026

இந்தியா4 நாட்கள் ago

இனி ஆன்லைன் வழியாக வாசனையையும் அனுபவிக்கலாம்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.10.2026

Translate »
Kearney news is an independent uk online newspaper dedicated to delivering trusted, accessible, and community focused journalism.