சினிமா செய்திகள்
இந்த 16 பேருல யார்ரா ‘மாரி’? விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் 2 நிமிட வீடியோ!

தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரான விஷால் நடித்த ’வீரமே வாகை சூடும்’ என்ற திரைப் படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில மாதங்கள் ஆகியுள்ள நிலையில் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி இந்த படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் இரண்டு நிமிடங்களுக்கு மேலாக ஓடும் ஸ்னீக்பீக் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் விஷாலின் அதிரடி மாஸ் காட்சிகள் உள்ளன என்பதை அடுத்து அவரது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது. மாரி என்பவரை தேடி வரும் விஷால், தானாக முன்வந்து மாரி தன்னை ஒப்புக் கொண்டால் சரி, இல்லாவிட்டால் இங்கு இருக்கும் 16 பேரையும் அடிப்பேன் என்று அவர் கூறுவதோடு அதிரடி ஆக்ஷன் காட்சியில் ஈடுபடுவதும் இந்த இரண்டு நிமிட வீடியோவில் உள்ளது.
ஆக்சன் பிரியர்களுக்கு இந்த படம் சரியான விருந்தாக இருக்கும் என்பது இந்த இரண்டு நிமிட வீடியோவில் இருந்து தெரிய வருகிறது. விஷால், யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதாபாரதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பதும் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை து.பா.சரவணன் இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.