சினிமா செய்திகள்
விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’: 70% நஷ்டம் என விநியோகிஸ்தர்கள் தகவல்!

விஷால் நடித்த ‘வீரமே வாகை சூடும் திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியான நிலையில் இந்த படம் கிட்டத்தட்ட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் தூக்கிவிட விட்டதாகவும் இந்த படத்தால் விநியோகிஸ்தர்களுக்கு 60 முதல் 70 சதவீதம் வரை நஷ்டம் என்றும் கூறப்படுகிறது.
விஷால் நடித்த ‘வீரமே வாகை சூடும் என்ற திரைப்படம் மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியானது. இந்த படம் சுமார் 500 திரையரங்குகளில் தமிழகத்தில் ரிலீஸ் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தின் முதல் காட்சி முடிந்ததும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மற்றும் விமர்சகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை பதிவு செய்தனர். ஒரு சில காட்சிகள் தவிர இந்தப் படம் மிகப் பெரியளவில் போரடிப்பதாகவும் ஏற்கனவே பல படங்களில் உள்ள காட்சிகள் தான் இருப்பதாகவும் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாகவும் எந்த ஒரு சுவராசியமான காட்சிகளும் இல்லை என்றும் கூறப்பட்டது.
இதனால் திரையரங்குகளில் இரண்டாவது காட்சி முதல் கூட்டம் குறையத் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்றுடன் இந்த படம் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் தூக்கப்பட்டு விட்டதாகவும் இதனால் விநியோகஸ்தருக்கு சுமார் 60 முதல் 70 சதவீதம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே விஷால் நடிப்பில் வெளியான மூன்று படங்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்த நிலையில் இந்த படமும் அவரது தோல்வி பட்டியலில் இணைந்து உள்ளதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


















