சினிமா செய்திகள்
திருமணம் மோஷன் போஸ்டரை வெளியிட்ட தனுஷ்!
சேரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியுள்ள படம் திருமணம். அதன் டீஸரை சமீபத்தில் விஜய்சேதுபதி வெளியிட்டார். தற்போது, திருமணம் படத்தின் மோஷன் போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.
பொதுவாக மோஷன் போஸ்டர் தான் முதலில் வெளியாகும் ஆனால், எதையுமே சற்று வித்தியாசமாக சிந்திக்கும் சேரன் இந்த புதிய ஐடியாவை செய்துள்ளார்.
டீஸர் வெளியான போது, சீரியலை விட மோசமாக உள்ளதாக நெட்டிசன்கள் பலரும் டிரோல் செய்தனர்.
திருட்டு விசிடிகளுக்கு எதிராக புரட்சி ஏற்படுத்த சி டு எச் சிடி டு ஹோம் எனும் கான்செப்டை சசிகுமார் அறிமுகப்படுத்தினார். மேலும், அவரது இயக்கத்தில் உருவான ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை படத்தையும் தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் சிடுஎச் மூலாமாகவே ரிலீஸ் செய்தார்.
ஆனால், அவர் நினைத்தது போல மக்கள் அதற்கு பெரிய வரவேற்பு கொடுக்காததால், மிகுந்த நஷ்டத்தில் சிக்கி தவித்தார் சேரன்.
தற்போது, குறைந்த முதலீட்டில் தரமான குடும்ப கதையை கையில் எடுத்துக் கொண்டு களமிறங்கவுள்ளார் சேரன்.
இந்த திருமணம் படமாவது அவருக்கு கைகொடுக்குமா என்பது படம் வெளியான பிறகு தெரிந்துவிடும்.




















