இந்தியா
இன்ஸ்டாகிராம் ஸ்பான்ஸர் பதிவுக்கு இத்தனை கோடியா? ஆச்சரிய தகவல்!

இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் பிரபலங்களுக்கு ஸ்பான்சர்கள் தேடிவந்து விளம்பரங்களை தருகின்றனர் என்றும் அதற்காக லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பளம் தருகின்றனர் என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன
இன்ஸ்டாகிராமில் உள்ள பல பிரபலங்கள் தற்போது இந்த விளம்பர முயற்சிகளில் ஈடுபட்டு இலட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு கிடைக்கும் பணம் ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்பான்சரில் கிடைத்து விடுவதால் பல நடிகர் நடிகைகள் மற்றும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தற்போது முழுநேர தொழிலாக இதனை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பதிவுகளின் மூலம் அதிக பணம் சம்பாதிக்கும் 30 பேர் கொண்ட பட்டியல் சற்று முன் வெளியாகி உள்ளது. இதில் ஒரு ஸ்பான்சர் பதிவுக்கு ரூ.11 கோடி வாங்குகிறார் பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் இவர் தான் முதல் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் ஒரு இன்ஸ்டாகிராம் ஸ்பான்சர் பதிவுக்கு ரூபாய் 5 கோடி வாங்கும் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி 17-வது இடத்திலும், ரூபாய் 3 கோடி வாங்கும் நடிகை பிரியங்கா சோப்ரா 27வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ் திரைப்பட நடிகர் நடிகைகள் பலரும் இதேபோல் இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கான ஃபாலோயர்களை வைத்து உள்ளவர்கள் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இன்ஸ்டாகிராம் ஸ்பான்ஸர் மூலம் சம்பாதிக்கும் 5 பிரபல விளையாட்டு வீரர்கள் இதோ
1. ரொனோல்டா — 295,984,958 ஃபாலோயர்கள், $1,604,000 ஒரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கு
2. மெஸ்ஸி — 215,727,437 ஃபாலோயர்கள், $1,169,000 ஒரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கு
3. நெய்மர் ஜூனியர் — 151,910,286 ஃபாலோயர்கள், $824,000 ஒரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கு
4. விராத் கோஹ்லி — 125,412,624 ஃபாலோயர்கள், $680,000 ஒரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கு
5. லெப்ரான் ஜேம்ஸ் — 87,457,374 ஃபாலோயர்கள், $474,000 ஒரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கு















