Connect with us

ஆரோக்கியம்

சுவையாகவும் மொறுமொறுவெனவும்: கருணைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி?

Published

on

உருளைக்கிழங்கு மட்டுமின்றி, பல சுவையான மற்றும் ஆரோக்கியமான கிழங்கு வகைகள் நம்மிடம் உள்ளன. ஆனால் அவை உருளைக்கிழங்கு அளவுக்கு பிரபலமாக இல்லாததால், சாப்பிடும் ஆர்வம் குறைவாகவே இருக்கும். குறிப்பாக, கருணைக்கிழங்கு என்றாலே சிலருக்கு விருப்பு இல்லை. ஆனால் அந்த கிழங்கையே மொறுமொறுவென கட்லெட்டாக மாற்றினால், பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!

இந்த பதிவில் சுவையான மற்றும் ஆரோக்கியமான கருணைக்கிழங்கு கட்லெட் செய்முறையை எளிமையாக Step-by-Step முறையில் பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • கருணைக்கிழங்கு – 200 கிராம்

  • பூண்டு – 8 பல்

  • இஞ்சி – ½ அங்குலம்

  • சோம்பு, சீரகம் – தலா 1 ஸ்பூன்

  • கடலைமாவு – 1 கப்

  • பெரிய வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கவும்)

  • மிளகாய் தூள் – 1 ஸ்பூன்

  • மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்

  • உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

  • கறிவேப்பிலை – 1 கொத்து

  • கொத்தமல்லி – 2 கொத்து


🧑‍🍳 செய்முறை:

  1. பூண்டு, இஞ்சி, சோம்பு, சீரகம் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைக்கவும்.

  2. கருணைக்கிழங்கை அரிசி கழுவிய தண்ணீரில் குக்கரில் 10 நிமிடம் வேக வைத்து தோல் உரித்து நன்கு மசிக்கவும்.

  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் வதக்கவும். பொன்னிறமாக ஆனதும் அரைத்த விழுதும், கறிவேப்பிலையும் சேர்க்கவும்.

  4. மசித்த கருணைக்கிழங்கும் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

  5. கடலைமாவுடன் மஞ்சள், மிளகாய்தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைக்கவும்.

  6. இதை சமைக்கின்ற கலவையில் ஊற்றி நன்கு கிளறி, கெட்டியாக ஆனதும் கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

  7. மிக்ஸரை ஒரு தட்டில் பரப்பி, சிறிய உருண்டைகளாக உருட்டவும் அல்லது கட்லெட் வடிவில் தட்டி வைக்கவும்.

  8. எண்ணெயில் இரு பக்கமும் மொறுமொறுவென வறுத்து எடுக்கவும்.

  9. சூடாக பரிமாறலாம். சட்னி அல்லது சாஸ் உடன் பரிமாறினால் சிறந்தது.

Translate »
Your website gets cited on other sites alongside its backlinks — hitting both seo and geo at once.