Connect with us

ஆரோக்கியம்

அரிசி மாவுடன் தயாரிக்கக்கூடிய டாப் 5 ஃபேஸ் பேக்குகள் – முகம் பளபளப்பாக மின்ன இதை தினமும் செய்யுங்கள்!

Published

on

தினமும் வெளியே செல்வோருக்காக முக்கியமான அழகு பராமரிப்பு குறிப்புகள்!

இன்றைய காலத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக, வெளியே சென்றாலே முகத்தில் அழுக்கு சேர்ந்து, முகம் டாலாகவும், கருப்பாகவும் தோன்றுகிறது. சரியான பராமரிப்பு இல்லாதால், முகம் மேல் கறுப்பு படிவம் ஏற்படும். இதை தவிர்க்க, தினமும் தூங்கும் முன் முகத்தை சுத்தம் செய்து, ஃபேஸ் பேக் போடுவது அவசியம்.

அதிலும், வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு இயற்கையான ஃபேஸ் பேக்குகளை தயாரிக்கலாம். இதில் அரிசி மாவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கீழே கொடுக்கப்பட்டுள்ள 5 சிறந்த அரிசி மாவு ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி முகத்தில் உள்ள அழுக்கை நீக்கி, முக ஒளியை அதிகரிக்கலாம்.


1. அரிசி மாவு மற்றும் மஞ்சள் ஃபேஸ் பேக்

  • 1 டீஸ்பூன் அரிசி மாவு, 1 டீஸ்பூன் பிரஷ் க்ரீம், 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்யவும்.

  • முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவிடவும்.

  • குளிர்ந்த நீரால் கழுவவும்.

  • வாரத்திற்கு ஒருமுறை செய்வதால் முகம் பிரகாசமாகும்.


2. அரிசி மாவு மற்றும் ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்

  • 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு, 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்யவும்.

  • முகத்தில் 15 நிமிடங்கள் ஊறவைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.

  • வாரம் ஒருமுறை போதுமானது.


3. அரிசி மாவு மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்

  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல், 2 டேபிள் ஸ்பூன் துருவிய வெள்ளரிக்காய் சேர்க்கவும்.

  • முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வைக்கவும்.

  • வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.

  • வறண்ட சருமம் கொண்டவர்கள் இந்த பேக்கை பயன்படுத்தலாம்.


4. அரிசி மாவு மற்றும் கடலை மாவு ஃபேஸ் பேக்

  • 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 1 டீஸ்பூன் கடலை மாவு, 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கவும்.

  • அதில் தக்காளி சாறு சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் 15 நிமிடங்கள் வைக்கவும்.

  • வெதுவெதுப்பான நீரால் கழுவவும்.

  • தினமும் பயன்படுத்தலாம்.


5. அரிசி மாவு மற்றும் தக்காளி ஃபேஸ் பேக்

  • 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 1 தக்காளியின் சாறு, 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்க்கவும்.

  • முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

  • குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும்.

  • தினமும் ஒரு முறை செய்து வந்தால், முகம் பளிச்சென்று மின்னும்.

Translate »
pifteau henri, biolinker.