சினிமா செய்திகள்
நடிகர் விஷாலுக்கு அபராதம்: சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழ் திரை உலகின் பிரபல நடிகரான விஷாலுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஷால் வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். இந்த சோதனையில் ரூபாய் ஒரு கோடி வரை வரி செலுத்தத ஆவணங்கள் சிக்கியதாகவும் இதனை அடுத்து விசாரணைக்கு நடிகர் விஷால் ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பப்பட்டதாகவும் தெரிகிறது.
மேலும் ஜிஎஸ்டி செலுத்தாதது தொடர்பான விவகாரத்தில் நேரில் ஆஜராகும்படி நடிகர் விஷாலுக்கு தொடர்ந்து பத்து முறை வருமான வரித்துறாஇ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால் 10 முறையும் நடிகர் விஷால் அதிகாரிகள் முன்பு ஆஜராகவில்லை என்று தெரிகிறது.
இதுகுறித்து சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறையினர் சார்பில் தொடர்ந்த வழக்கில் நடிகர் விஷாலுக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் விஷால் தற்போது வீரமே வாகை சூடும், துப்பரிவாளன் 2, லத்தி மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.