உலகம்
உலக அளவில் கொரோனா பாதிப்பு 20 லட்சமாகவும் உயர்வு; 2லட்சத்தை நெருங்கும் உயிரிழப்பு

கொரோனா கடந்த சில மாதங்களாக உலகை அச்சுறுத்தி வரும் ஒரு மிக்கப்பெரிய செய்தியாக உள்ளது. சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா இன்று செவ்வாய்க்கிழமை காலை வரை கிட்டத்தட்ட 1,882,339 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,37,551 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,17,418ஆக உயர்ந்தது
உலக அளவில் அமெரிக்காவில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 564,317ஆக உயர்ந்துள்ளது. முதல் இடத்தில் உள்ளது அமெரிக்கா. அமெரிக்காவில் கொரோனாவால் புதிதாக 745 பேர் உயிரிழப்பு; மொத்த பலி எண்ணிக்கை 22,850ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது
இங்கிலாந்தில் புதிதாக 4,342 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 88,621ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் கொரோனாவால் ஒரே நாளில் 717 பேர் உயிரிழப்பு; இங்கிலாந்தில் இதுவரை 11,329 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் புதிதாக 3,153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் மொத்த கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,59,516ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் புதிதாக 566 பேர் உயிரிழந்தவர்களையும் சேர்த்து மொத்த பலி எண்ணிக்கை 20,465ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மீண்டும் கொரோனா தொற்று பரவி வருகிறது. புதிதாக 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; இருவர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இதுவரை 82,160 பேர் பாதிப்பு; 3,341 பேர் உயிரிழப்பு; 77,663 பேர் குணமடைந்துள்ளனர்
ஸ்பெயினில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,489ஆக உயர்ந்து 1,69,496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்







