சினிமா செய்திகள்
அதிர்ச்சி.. ஐஷ்வர்யா தனுஷ் மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஷ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐஷ்வார்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை அவரே இன்ஸ்டாகிராம் பதிவு மூலமாகத் தெரிவித்துள்ளார்.
ஐஷ்வர்யாவின் இன்ஸ்டாகிராம் பதிவில், “கொரோனா தொற்று பரவல் குறித்து எச்சரிக்கையாக இருந்தும் தனக்கு கொரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இப்போது நான் மருத்துவமனையில் இருக்கிறேன். தயவு செய்து அனைவரும் மாஸ்க் அணியுங்கள்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். பாதுகாப்பாக இருங்கள். 2022 இன்னும் என்னவெல்லாம் எனக்கு வைத்துள்ளது என பார்க்கலாம்” என்று தனது பதிவில் ஐஷ்வர்யா குறிப்பிட்டுள்ளார்.
ஐஷ்வர்யாவின் இந்த வார்த்தையைப் பார்க்கும் போது ஏற்கவே தனுஷின் விவாகரத்து அறிவிப்பால் இவரது மனம் புண்படுத்தப்பட்டு இருந்தது. இப்போது கொரோனாவால் இவர் பாதிக்கப்பட்டுள்ளது உடல் ரீதியாகவும் இவரை பலவீனப்படுத்தி வருவதைக் குறிக்கிறது.
தனுஷ் – ஐஷ்வர்யாவின் பிரிவு அறிவிப்பால் ஏற்கனவே ரஜினிகாந்த் குடும்பம் சோகத்திலிருந்து வந்தது. இப்போது ஐஷ்வர்யாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது மேலும் சோகத்தை ரஜினி வீட்டில் ஏற்படுத்தியுள்ளது.
View this post on Instagram


















