ஆரோக்கியம்
கூர்க் ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபி: இந்த வாரம் உங்கள் வீட்டிலேயே தென்னிந்திய சிறப்பு சுவையுடன் சிக்கன் செய்து சுவையுங்கள்!

வார இறுதி நாட்களில் வித்தியாசமான சுவையிலான சிக்கன் செய்து சாப்பிட வேண்டுமா? அப்படியானால் இந்த கூர்க் ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபியை செய்து பாருங்கள். இதன் மணமும் சுவையும் அற்புதமாக இருக்கும். சப்பாத்தி, பூரி, சாதம், இட்லி என எந்த வகை உணவுடன் வேண்டுமானாலும் இது சேர்த்துச் சாப்பிடலாம். ஒருமுறை சுவைத்தால் அடிக்கடி செய்வீர்கள் என்பதில் ஐயமில்லை!
🧂 தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு:
சிக்கன் – ½ கிலோ
உப்பு – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
வதக்கி அரைப்பதற்கு:
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பட்டை – 2 துண்டு
அன்னாசிப்பூ – 1
ஏலக்காய் – 3
கிராம்பு – 4
மிளகு – ½ டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 3 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி – 1 கைப்பிடி அளவு
உப்பு – ¼ டீஸ்பூன்
தண்ணீர் – ½ கப்
தாளிப்பதற்கு:
எண்ணெய் – 2-3 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
புளிச்சாறு – 3 டேபிள் ஸ்பூன்
🍳 செய்முறை:
சிக்கனை நன்கு கழுவி மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, அன்னாசிப்பூ, ஏலக்காய், கிராம்பு, மிளகு, கடுகு, சீரகம் சேர்த்து வறுக்கவும்.
அதில் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கி, பின்னர் மல்லித் தூள் மற்றும் கொத்தமல்லி சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
குளிர்ந்ததும் மிக்சியில் அரைத்து மசாலா பேஸ்ட் தயார் செய்யவும்.
வேறு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
ஊற வைத்த சிக்கனை சேர்த்து 5 நிமிடம் வேகவைத்து, அரைத்த மசாலாவை சேர்க்கவும்.
மிதமான தீயில் 15 நிமிடம் மூடி வைத்து வேகவைக்கவும்.
பின்னர் புளிச்சாறு சேர்த்து 5 நிமிடம் வேகவைத்து இறக்கவும்.
மேலே கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.
வித்தியாசமான மணமும் சுவையும் கொண்ட கூர்க் ஸ்டைல் சிக்கன் மசாலா தயார்!


















